தமிழர்கள் தக்க பாடம் புகட்டுவர்! கொந்தளிக்கும் சம்பந்தன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிவருகின்ற சில்லறைத்தனமான கருத்துகளுக்கு தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அவருக்குப் புகட்டிய பாடங்களை மறக்காமல் இருந்தால் சரி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தமிழீழ விடுதலைப்புலிகளிடம் நீங்கள் (இரா.சம்பந்தன்) புனர்வாழ்வு பெற்ற பின்னரே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்” என்று … Continue reading தமிழர்கள் தக்க பாடம் புகட்டுவர்! கொந்தளிக்கும் சம்பந்தன்